மாநிலச் செய்தி தூத்துக்குடி

ஜாதி வன்மத்தால் தென் தமிழகம் முடங்கி கிடக்கிறது... பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!

by admin on | 2023-09-04 22:09:07

Share: | | |


ஜாதி வன்மத்தால் தென் தமிழகம் முடங்கி கிடக்கிறது... பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!

தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக புது பார்வையோடு திட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் அது பாரதிய ஜனதா கட்சியால் மட்டும் தான் முடியும் என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

என் மண் என் மக்கள் என்ற யாத்திரை பயணத்தை இரண்டாவது கட்டமாக இன்று தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தொடங்குவதற்காக அவர் தூத்துக்குடி விமான நிலையம் வந்து இறங்கினார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர் கடந்த மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக கிளை தலைவர் குடும்பத்தோடு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது என அவர் குற்றம் சாட்டினார்.

தமிழகம் வன்முறை கலாச்சாரமாக மையமாக மாறி உள்ளது. தமிழகத்தில் கந்துவட்டி கொடுமை, கூலிப்படை தாக்குதல் அதிகரித்துள்ளது.லஞ்சம் அதிகரித்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் திமுக அரசு உள்ளது. தமிழகத்தில் ஆட்சி செய்யக்கூடிய திமுக கடந்த 30 மாதங்களாக தான் செய்த சாதனைகளை சொல்ல முடியாமல் இந்தியாவில் மணிப்பூரில் கலவரம் மகாராஷ்டிராவில் இன மக்களை குழப்பி வருகிறது. தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்காகவும், பெண்களுக்காகவும், கல்விக்கான வளர்ச்சியை திமுக இதுவரை கண்டு கொள்ளவில்லை.

இந்திய வரலாற்றிலேயே பெண் குழந்தைகளுக்கு அனைத்து பள்ளிகளிலும் தனியாக கழிப்பறை இருக்க வேண்டும் என்று பெரும் திட்டத்தை கொண்டு வந்தது பாரதிய ஜனதா கட்சி எனக் கூறிய அவர், தென் தமிழகம் வளர்ச்சியில் பின்னாக்கியுள்ளது ஒரு அபாயகரமான மண்டலமாக காட்சியளித்து வருகிறது. இங்கு முன்னேற்றம் என்பது இல்லை. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் 1 முதல் 2 ட்ரில்லியன் பொருளாதாரம் தென் தமிழகத்தில் உருவாக வேண்டும் ஆனால் அப்படி இல்லாமல் ஜாதி, வன்முறை போன்றவற்றால் முடங்கி கிடக்கிறது.

படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை.சென்னையில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகளுக்கு தென் தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என அவர் குற்றம் சாட்டிய அவர் வருங்காலங்களில் தொழில் வளர்ச்சிக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது அதில் 50 சதவீதம் தென் தமிழகத்தில் வருமாறு அரசு தொலைநோக்கு சிந்தனையோடு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உதான் திட்டத்தின் மூலமாக தூத்துக்குடியில் மற்றொரு விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Annamalai Full byte Video

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek