மாநிலச் செய்தி தூத்துக்குடி

விளை நிலத்தில் காற்றாலை அமைப்பதை தட்டிக்கேட்ட முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் : தூத்துக்குடி மருத்துவமனைக்கு மாற்றம்!

by admin on | 2023-09-04 09:31:40

Share: | | |


விளை நிலத்தில் காற்றாலை அமைப்பதை தட்டிக்கேட்ட முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் : தூத்துக்குடி மருத்துவமனைக்கு மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் விளை நிலங்களில் தனியார் காற்றாலை அமைப்பதை தட்டிகேட்ட ஓட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பிர் சுந்தர்ராஜன் மீது காற்றாலை நிறுவனத்தினர் தாக்குதல்  நடத்தியதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் பொதுப்பணித்துறை-க்கு சொந்தமான ஓடை பகுதிய ஆக்கிரமிப்பு செய்து தனியார் காற்றாலை நிறுவனத்தினர் காற்றாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பொதுபணித்துறைக்கு சொந்தமான ஓடையினை ஆக்கிரமிப்பு செய்து காற்றாலை அமைத்து வரும் தனியார் காற்றாலை நிறுவனத்தின் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்ககோரி முன்னாள் ஓட்டப்பிடாரம்  சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் பொதுப்பணிதுறை மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து தனியார் காற்றாலை நிறுவனம் கடந்த 3-மாதங்களாக பணிகளை நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் நிறுத்திய பணிகளை மீண்டும் தொடங்கி உள்ளனர். இதனால் மீண்டும் அதனை தட்டிகேட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ராஜன் மீது தனியார் காற்றாலை நிறுவனத்தின் ஊழியர்கள் சுமார் 20-பேர் சேர்ந்து தாக்குதல் நடத்தியதில் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் ஓட்டப்பிடாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் பேட்டி வீடியோவில்...

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek