மாநிலம் சென்னை

ஒரேநாடு ஒரே தேர்தலை ஆதரிக்கும் அதிமுக பலிகடா ஆகப்போகிறது: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

by admin on | 2023-09-03 11:10:30

Share: | | |


ஒரேநாடு ஒரே தேர்தலை ஆதரிக்கும் அதிமுக பலிகடா ஆகப்போகிறது: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது:

ஒரேநாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையோடு நாடாளுமன்றக் கூட்டததை அவசரமாக கூட்ட இருக்கிறார்கள்.

குழுவுக்கு தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவரை நியமித்திருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் பொதுவானர். இது மரபு மீறிய செயல். சர்வாதிகாரத்தோடு கமிட்டி உறுப்பினர்களையும் நியமித்து இருக்கிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக ஆதரிக்கிறது. கோடாரியை எடுத்து ஆட்டுத் தலையை  வெட்டுவது போல் பலிகடாவாகி வருகிறது அதிமுக. 

ஒரேநாடு ஒரே அதிபர் என்ற அடிப்படையில் தேர்தல் நடத்த முயற்சிக்கிறார்கள். கர்நாடகாவில் பாஜக படுதோல்வி அடைந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அமைந்திருக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சதிதிட்டம். நாட்டைப்பற்றி இவர்கள் கவலைப்படவிலலை. தேர்தல் செலவு குறைக்க நினைப்பதென்றால் நீங்கள் கொள்ளை அடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 

ஏழரை லட்சம் கோடி கொள்ளை டோல்கேட் வசூலில் நடைபெற்று இருக்கிறது. ஆதரத்தோடு சிஏஜி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

கொடுமையான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற இன்றைக்கே தயாராக இருப்போம் என உறுதி மொழி ஏற்க வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek