மாவட்டம் தூத்துக்குடி

பூலித்தேவர் 308வது பிறந்தநாள்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை !

by admin on | 2023-09-02 07:30:57

Share: | | |


பூலித்தேவர் 308வது பிறந்தநாள்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை !

பூலித்தேவர் 308வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவில்பட்டியில் அவரது திருவுருவ படத்திற்கு  முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 308வது பிறந்தநாள் விழாவையொட்டி கோவில்பட்டியில் தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

தேவர் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூலித்தேவர் திருவுருவ படத்திற்கு தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் வெயிலுமுத்து பாண்டியன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்வம் என்ற செல்லத்துரை ஆகியோர் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாலை யணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் வட்டார அளவிலான பெண்கள் கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க  ஊக்கத்தொகைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,நகர மன்ற உறுப்பினர்கள் செண்பக மூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன்,கவியரசு, அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் நாகராஜ்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, அம்பிகா பாலன்,பத்மாவதி,கோமதி, அல்லித்துரை, குழந்தை ராஜ்,ஜெய் சிங்,கோபி,முருகன், அங்குசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek