மாவட்டம் சென்னை

ஸ்மார்ட் சிட்டி மாதிரி... காதர் நவாஸ்கான் சாலையில் நடைபாதை வளாகம்: அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார் !

by admin on | 2023-09-01 10:06:27

Share: | | |


ஸ்மார்ட் சிட்டி மாதிரி... காதர் நவாஸ்கான் சாலையில் நடைபாதை வளாகம்: அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார் !

சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், காதர் நவாஸ்கான் சாலையில் உலக வங்கியின் சென்னை நகர கூட்டமைப்பு திட்டத்தின் கீழ் மாநில உட் கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 19.81 கோடி மதிப்பீட்டில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு,தற்போது தொடங்கப்பட்டுள்ள காதர் நவாஸ்கான் நடைபாதை வளாகப்பபணி 18 மாதங்களுக்குள் நிறைவு பெறும்.

சென்னை மதுரை கோவை உள்ளிட்ட மாநகரங்களில் குடிநீர் குறைவாக இருந்தபோதிலும் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கோவை மதுரையில் குடிநீர்த் திட்டப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி செப்டம்பர் 15 க்குள் முடிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி தற்போது முக்கிய சாலைகளில் மழைநீர் வடிகால் இணைப்புப் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

காலை உணவுத் திட்டம் தொடர்பாக வெளியிட்ட செய்திக்கு தினமலர் நாளிதழ் மன்னிப்பு கேட்டுவிட்டது.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek