மாநிலச் செய்தி சேலம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சிபிஐ-யை நாடப் போவதாக கூறும் புகழேந்தி !

by admin on | 2023-08-27 15:56:37

Share: | | |


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு:  சிபிஐ-யை நாடப் போவதாக கூறும் புகழேந்தி !

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி மீது நம்பிக்கை இல்லை எனவும், சிபிஐ-யை நாட உள்ளதாகவும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை திசை திருப்பவே கனகராஜ் ஜெயலலிதாவின் டிரைவர் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி சொல்வதாக தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி உள்பட 12 பேரிடம் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டும் தமிழக அரசு எடப்பாடி பழனிச்சாமியை மட்டும் விசாரிக்காதது ஏன் எனவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே என்ன அண்டர்ஸ்டாண்டிங் எனவும் கேள்வி எழுப்பிய புகழேந்தி முதலமைச்சரின் நடவடிக்கையால் திமுக தொண்டர்களே தலையில் அடித்துக் கொள்கிறார்கள் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்ததால்தான் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை போச்சு எனவும், இது பாஜக செய்த கூத்து எனவும் தெரிவித்துள்ள அவர் அதிமுக எங்களது கட்சி. தேர்தல் ஆணையம் சொல்லட்டும் அதிமுக யாருடையது என தெரிவித்துள்ளார். மேலும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி மீது நம்பிக்கை இல்லை எனவும் சிபிஐ-யை நாட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேட்டி முழுமையாகக் காண இங்கே க்ளிக் பண்ணுங்க...

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek