மாவட்டம் சேலம்

சேலம் மாவட்ட பார்வையாளர்களை கவர்ந்த அகில இந்திய நாய்கள் கண்காட்சி!

by admin on | 2023-08-27 14:32:51

Share: | | |


சேலம் மாவட்ட பார்வையாளர்களை கவர்ந்த அகில இந்திய நாய்கள் கண்காட்சி!

சேலம் தி ஆக்மே கென்னல் கிளப் சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

தி ஆக்மே கென்னல் கிளப் தலைவர் விசுகாளியம்மன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்கட்சியில் பல அரிய வகையான நாய்கள் கலந்து கொண்டன. 40 வகையான 400 க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றன. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூனே, கோலாலம்பூர், மகாராஷ்ட்ரா, பெங்களூர், கேரளா, பஞ்சாப் , போபால், கொல்கத்தா மற்றும் பல மாநிலங்களில் இருந்துபல்வேறு வகையான நாய்கள் பங்கேற்றன.

பொமேரியன், மினியச்சர், பிகில், ஸ்பேனியல், புல் டாக், செயின் பெர்னாட் சலோகி உள்ளிட்ட பல்வேறு வகையான நாய் வகைகளின் திறமைகளையும் செயல்பாடுகளையும் கண்காணிக்க ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாசன், சைனாவை சேர்ந்த அண்டோனியா, கான்பூரை சேர்ந்த ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டு நாய்களின் செயல்பாடுகள் உரிமையாளரின் கட்டுப்பாட்டுக்கு கீழ்படிதல் மற்றும் சாகச நிகழ்ச்சிகளை கண்காணித்தினர்,

சிறந்த நாய்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நாய் கண்காட்சியில் சேலம் மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நாய்களின் திறமைகளை கண்டு ரசித்தனர் இந்த நிகழ்ச்சியில் ஆக்மே கென்னல் கிளப் நிர்வாகிகள் சாந்த மூர்த்தி சீனிவாசன் நடராஜன் பிரகாஷ் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

video link ....

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek