மாநிலச் செய்தி சேலம்

நீதி, தர்மம், நியாயம் வென்றது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி!

by admin on | 2023-08-26 09:01:04

Share: | | |


நீதி, தர்மம், நியாயம் வென்றது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்ற நீதிபதி குழு தீர்ப்பு அறிவித்ததை யடுத்து,  சேலம் மாவட்டம் எடப்பாடியில்  உள்ள தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் தங்கி இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அங்குள்ள கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.  

பின்னர் அவர் செய்தியாளர்களிடம்
கூறும் போது,  இந்த தீர்ப்பின் மூலம் நீதி , தர்மம் , உண்மை வென்றுள்ளது. எனது தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.நீதி வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவோம்,  மாநிலத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தங்களை சம்பந்தப்படுத்தி கார் ஓட்டுநர்  கனகராஜின் அண்ணன் தனபால் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 
யாரோ ஒருவர் ரோட்டில் போகிறவர் எல்லாம் கூறுவதை ஊடகங்கள் வெளியிடுவது தவறு ,  தனது ஆட்சியின் போது பல சம்பவங்கள் நடந்தது்  அதனை சட்டத்தின் படி நாங்கள் கையாண்டு நடவடிக்கை  எடுத்துள்ளோம். 

அதிமுக ஆட்சியின் போது சட்டத்தின் ஆட்சிதான் நடந்தது. ஏற்கனவே பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவர் தனபால், அவர் மூன்று மாதம் சிறையில் இருந்தவர்,   நில அபகரிப்பு வழக்கில் கைதாகி தற்போது  ஜாமினில் வெளியே வந்திருக்கிறார்.

அவர் கூறுவதை எல்லாம் ஊடகங்கள் வெளியிடுவது தவறு ,  கனகராஜ் ஜெயலலிதா அவர்களின் டிரைவராக ஒருபோதும் இருந்ததில்லை. அவர் சசிகலா அவர்களின் டிரைவராக மட்டுமே பணியாற்றியவர். ஒரு நாள் கூட ஜெயலலிதா அவர்களுக்கு கனகராஜ்  கார் ஓட்ட வில்லை. எனவே இனி ஊடகங்கள் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் என கூறினால் நான் வழக்கு தொடர்வேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து மதுரை மாநாடு குறித்து கூறும் போது,  ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டை நடத்தியுள்ளோம். பதினைந்து லட்சம் பேர் திரண்டனர். இதுவே அதிமுக எங்கள் பக்கம் தான் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது என்றார் .

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek