மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி சிப்காட் அருகே, இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து: இளம் பொறியாளர் உயிரிழப்பு

by admin on | 2023-08-23 11:38:55

Share: | | |


தூத்துக்குடி சிப்காட் அருகே, இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து:  இளம் பொறியாளர் உயிரிழப்பு

 

தூத்துக்குடி சிப்காட் அருகே, இருசக்கர வாகனம் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளம் பொறியியல் பட்டதாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே இந்திரா நகரைச் சேர்ந்தவர் 
மயிலேறி. இவரது மகன் குரு சந்திர பிரகாஷ் ( வயது  23 ). குருசந்திர பிரகாஷ் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பொறியாளராக பணி புரிந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்றிரவு பணிமுடிந்து துறைமுகம் அருகே உள்ள நிறுவனத்திலிருந்து குரு சந்திர பிரகாஷ் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி வந்துள்ளார். சிப்காட் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம், திடீரென இவரது  இரு சக்கர வாகனத்தின் மீது மோதி வேகமாக சென்றது. சற்றும் எதிர்பாராத இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே குரு சந்திர பிரகாஷ் உயிரிழந்தார்.

சிப்காட் காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் வழக்குப் பதிவு செய்து இரு சக்கர வாகனத்தில் மோதிச் சென்ற அடையாளம் தெரியாத வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

இளம் பொறியியல் பட்டதாரி விபத்தில் இறந்த சோகத்தில் இந்திரா நகர் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek