மாநிலம் சென்னை

சென்னை 384 : சிறப்புக் கவிதை

by admin on | 2023-08-22 22:01:28

Share: | | |


சென்னை 384 : சிறப்புக் கவிதை

சென்னையின் சிறப்பை, வாட்ஸ் அப் வரிகளாக்கிய வழக்கறிஞரின் கவிதை: 

சென்னை.
பழைமையின் அடையாளம்.

இங்கு கோட்டை உண்டு,
பல பேட்டைகளும் உண்டு.

சுற்றி பார்க்க மியூசியம் உண்டு,
காற்று வாங்க கடற்கரை
உண்டு.

ஊர்ந்து செல்ல சென்ட்ரல் உண்டு,
மிதந்து செல்ல துறைமுகம் உண்டு.

பறந்து செல்ல மீனம்பாக்கம் உண்டு,
பூமிக்கடியில் மெட்ரோ ரயிலும்,பூமிக்கு மேலே பறக்கும் இரயிலும் உண்டு.

நியாயம் கேட்ட கண்ணகி சிலை உண்டு,
நீதி வழங்க உயர் நீதிமன்றம் உண்டு.

தேசம் காத்தவர்கள் மணிமண்டபம் உண்டு,
நாட்டுக்கு உழைத்தவர்கள் நினைவிடம் உண்டு.

பக்திக்கான புகழிடம் உண்டு,
பகுத்தறிவு போற்ற பல இடம் உண்டு..

வந்தாரை மட்டுமல்ல .....
வாழ வழியில்லாத பலரையும் வாழவைக்கும் சென்னை .

ஜாதி மத பேதமில்லை.
தமிழகத்தின் ஒட்டு மொத்த உறவுகளும் வசிக்குமிடம்.

சென்னையின் பெருமை போற்றுவோம்...

சென்னைக்கு சிறப்பு சேர்த்திடுவோம்!.

அன்புடன்,
என்.மருதுகணேஷ்,
வழக்கறிஞர்,
ஆர்.கே.நகர்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek