மாநிலம் சென்னை

கிண்டியில் காசாளரிடம் 15 லட்சம் ரூபாய் கொள்ளை வழக்கு: மேலும் 6 பேர் கைது!

by admin on | 2023-08-22 20:47:03

Share: | | |


கிண்டியில் காசாளரிடம்  15 லட்சம் ரூபாய் கொள்ளை வழக்கு:  மேலும் 6 பேர் கைது!

சென்னை, கிண்டியில் 15 லட்சம் ரூபாய் வழிப்பறி வழக்கில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 8 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை கிண்டி போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை,வேளச்சேரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் காலனியில்  வசித்து வருபவர் சோமசுந்தரம்(55).
தனியார் நிறுவனத்தில் காசளராக வேலை செய்து வருகிறார். 

சோமசுந்தரம் கடந்த 18 ம் தேதி அன்று காலை 11.40 மணியளவில் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.15 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கிண்டி, மடுவங்கரை மசூதி காலனி 3வது தெருவில் சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த 3 நபர்கள் சோமசுந்தரத்தை வழிமறித்து தகராறு செய்து, தாக்கி அவரிடமிருந்து 15 லட்சம் ரூபாய் அடங்கிய பணப்பையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து சோமசுந்தரம் கிண்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

கிண்டி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட நீலாங்கரை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் முகமது ராசிக் (28), என்பவரை கைது செய்து 20 ம் தேதி  நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். 

கிண்டி காவல் நிலைய காவல் குழுவினர் மேலும் தீவிர விசாரணை செய்து, வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்டநீலாங்கரையை சேர்ந்த பெ.துரைசாமி மகன் மணிகண்டன் (33) பாலவாக்கம் ராஜேந்திரன் மகன் செந்தில்குமார்(42), நீலாங்கரை ஜோசப் ஆரோக்கியம் மகன் திலீப் ஆனந்த்(31) ,கொட்டிவாக்கம் நாகராஜ் மகன் தாமோதரன்(35), திருநெல்வேலி கேடிசி நகர், முகமது அலி மகன் சித்திக் அலி (44), திருநெல்வேலி ஆரப்பாளையம், முகமது பாருக் மகன் சையது அலி(48),  ஆகிய 6 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 8 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், 1 கார் மற்றும் 1 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek