மாநிலம் சேலம்

மருமகளிடம் வரதட்சணை கேட்டதாக பாமக MLA மீது வழக்கு !

by admin on | 2023-08-22 11:37:58

Share: | | |


மருமகளிடம் வரதட்சணை கேட்டதாக பாமக MLA மீது வழக்கு !

மருகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகர் சூரமங்கலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோலியா (24).இவருக்கும் சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பாமகவை சேர்ந்த சதாசிவத்தின் மகன் சங்கருக்கும் கடந்த 2019 ம் வருடம் திருமணம் நடந்தது.

தற்போது இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சங்கர் அவரது மனைவி மனோலியாவை தகாத வார்த்தைகளால் பேசியும், அடித்தும் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மனோலியா சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.தனது கணவர் சங்கர் மற்றும் மாமனார் சதாசிவம் ,மாமியார் பேபி, நாத்தனார் கலைவாணி ஆகியோர் தன்னை வரதட்சணை பணம் கேட்டு கொடுமை செய்து வந்ததாக கூறி உள்ளார்.

இந்த புகாரின்  அடிப்படையில் போலீசார் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் அவரது மனைவி பேபி, மகன் சங்கர், மகள் கலைவாணி,  ஆகிய 4 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில் பாமக எம்எல்ஏ தன் குடும்பத்துடன் சென்னையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் முன்பு முன்ஜாமின் பெறுவதற்காக நடவடிக்கைகளை எம்எல்ஏ சதாசிவம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சட்டப்பேரவை தலைவருக்கு சேலம் மாநகர போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek