விளையாட்டு செஸ்

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டி: கார்ல்செனை எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா

by admin on | 2023-08-22 08:25:34

Share: | | |


உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டி: கார்ல்செனை எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா

10-வது உலகக் கோப்பை செஸ் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. 
அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானா காருவானாவை சந்தித்தார். 

அரைஇறுதி சுற்று இரு ஆட்டங்கள் கொண்டது. இரு ஆட்டமும் டிராவில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது.

3 வது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் சாதுர்யமாக செயல்பட்ட பிரக்ஞானந்தா 63-வது காய் நகர்த்தலில் சிறப்பாக ஆடினார். 3½-2½ என்ற புள்ளி கணக்கில் பேபியானாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.


சென்னையை சேர்ந்த இளம்வீரர் பிரக்ஞானந்தா அடுத்து இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான நார்வேயை சேர்ந்த மாக்னஸ் கார்ல்செனுடன் மோதுகிறார். 

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek