மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை: அமலி நகர் மக்கள் போராட்டம் வாபஸ் !

by admin on | 2023-08-18 20:22:00

Share: | | |


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை: அமலி நகர் மக்கள் போராட்டம் வாபஸ் !

தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அமலி நகர் மக்களிடம் ஆட்சியரகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு கேட்டு 12 வது நாளாக போராட்டம் நடத்தி வரும் மீனவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமலிநகர் ஊர் நல கமிட்டி தலைவர் பாஸ்கர் மற்றும் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் 20 பெண்கள் உட்பட மொத்தம் 60 பேர் வருகை தந்திருந்தனர். அமலி நகரில் சுமார் 1000 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 200 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கடல் சீற்றத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு கரையில் படகுகளை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைவதாகவும், இந்தப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைத்து தரக்கூடிய தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத்தொடரந்து 2022 -ம் ஆண்டு சட்டப்பேரவை மீன்வள மானிய கோரிக்கையில் ரூ 58 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் மீன்வளத்துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்திய போதும், இதுவரையில் தூண்டில் வளைவுப்பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

எனவே உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தியும், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 7ம் தேதி முதல் அமலிநகர் மீனவர்கள் 12 நாளாக மீன் பிடித்தொழிலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மீனவர்களின் போராட்டத்தால் நாளொன்றுக்கு சுமார் ரூ.1.50 கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்ட நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விளக்கங்கள் அளித்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரின் விளக்கத்தை கேட்டு தற்பொழுது 12 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ் என ஊர் தலைவர் பாஸ்கரன் தெரிவித்தார். அமலி நகர் மீனவர்கள் திங்கட்கிழமை இருந்து கடலுக்கு செல்வோம் என உறுதியளித்துள்ளனர்.

video link

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek