மாநிலம் சென்னை

அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!.

by admin on | 2023-08-18 10:21:29

Share: | | |


அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்  நிரப்பப்பட உள்ள  ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 685 ஓட்டுநர் உடன் நடத்துநர்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. 

அதனை தொடர்ந்து 18.08.2023 அன்று முதல்  www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் ஆன் லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18.08.2023 மதியம் 01.00 மணி முதல் 18.09.2023 மதியம் 01.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். பணி நியமனம் முற்றிலும் வெளிப்படை தன்மை உடையதாக இருக்கும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும். தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


     

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek