மாநிலம் சென்னை

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம்

by admin on | 2023-08-10 11:56:59

Share: | | |


கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம்

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அறிவிக்கப்பட்டது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தருமபுரி  மாவட்டம்  தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்ப முகாமை  தொடங்கி வைத்தார். 

முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 

இரண்டாம் கட்ட முகாம் தற்போது நடைபெற்றுவருகிறது. இதுவரை 59.86 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 

இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ம் தேதிகளில் ஆகிய நாட்களில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது விண்ணப்பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek