பொது மு.முத்துராமன், தூத்துக்குடி.

திருச்செந்தூர் சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுத்த 370 வது ஆண்டு விழா | மெய்சிலிர்க்கும் வரலாறு தெரியுமா?

by puthiyavanadmin on | 2025-02-10 21:31:33

Share: | | |


திருச்செந்தூர் சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுத்த 370 வது ஆண்டு விழா | மெய்சிலிர்க்கும் வரலாறு தெரியுமா?

திருச்செந்தூர் சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுத்த 370 வது ஆண்டு விழா. மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு தெரியுமா? அன்றைய தினத்தில் கோயிலில் என்ன நடக்கும் தெரியுமா?

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் உற்சவர் சண்முகர் சிலை உள்ளது. கிபி 17ஆம் நூற்றாண்டில் டச்சு நாட்டு கடல் கொள்ளையர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கொள்ளை அடிப்பதற்காக அவர்கள் படைகளுடன் கோவிலுக்குள் புகுந்துள்ளனர். அங்கு இருந்த கல் சிலைகளை எல்லாம் அடித்து உடைத்த அவர்கள் கோவிலுக்குள் தெற்கு நோக்கி வீற்றிருந்த சுவாமி சண்முகர் ஐம்பொன் சிலையை கொள்ளை அடித்துச் சென்றனர்.
 
இதற்காக தாங்கள் வந்த கப்பலுக்கு சண்முகர் சிலையை தூக்கிச் சென்றனர். திருச்செந்தூரில் இருந்து கப்பல் புறப்பட்ட சிறிது தூரத்தில் கடலுக்குள் பெரும் புயலும் இடியுடன் கூடிய மலையும் பெய்துள்ளது. புயலால் நிலைகுலைந்த டச்சுக்காரர்கள் அந்த இடத்தில் இருந்து நகர முடியாமல் கப்பலில் தத்தளித்துள்ளனர்.

திடீரென யோசித்த டச்சுக்காரர்கள் அச்சத்தில் கொள்ளை அடித்து வந்த சுவாமி சண்முகர் சிலையை கடலுக்குள் தூக்கி போட்டுள்ளனர். அடுத்த நொடியே புயலும் மழையும் நின்று விட்டது. இதையடுத்து டச்சு கடல் கொள்ளையர்கள் வந்த திசையை நோக்கி தப்பித்தோம் பிழைத்தோம் என்று கப்பலில் தப்பிச் சென்றனர்.

திருச்செந்தூர் கோவிலில் சண்முகர் சிலை கொள்ளை அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அறிந்த பக்தர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். இந்த நிலையில் அந்த காலத்தில் நெல்லை மாவட்டத்தில் பிரபல முருக பக்தரான வடமலையப்பபிள்ளை கனவில் முருகப்பெருமான் தோன்றி தான் கடலில் இருக்கும் இடத்தினை திசையை உணர்த்தி அந்த இடத்தில் எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருக்கும் என்று அடையாளத்தை கூறி தன் மீண்டும் தன்னை மீண்டும் கோயில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என கூறினார்.

இதையடுத்து வடமலையப்பபிள்ளை மறுநாளே பக்தர்களோடு கடலுக்குள் சென்று அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து முதலில் நடராஜர் சிலையையும் பின்னர் சண்முகர் விக்கிரகத்தையும் கண்டெடுத்து ஆலயம் கொண்டு வந்து சேர்த்தனர். இச்செய்தியைக் கேட்ட பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர். இவ்வாறு சண்முகர் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நாள் கொல்லம் 829 ஆம் ஆண்டு தை மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை. அன்றைய தினமே திருச்செந்தூர் கோயிலில் மீண்டும் சண்முகர் பிரதிஷ்டையும் செய்யப்பட்டார்.
 
அதை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் தைப்பூசத்திற்கு முந்தைய நாள் வரும் புனர்பூச நட்சத்திரத்தில் சுவாமி சண்முகர் கண்டெடுத்ததை ஸ்ரீ சண்முகர் ஆண்டு விழாவாக கோயில் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. சண்முகர் கண்டெடுக்கப்பட்ட 370 வது ஆண்டு விழா இன்று 10.02.2025 விமர்சையாக நடைபெற உள்ளது. 

இந்த விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும் தொடர்ந்து தீபாராதனையும் மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயு கந்த பெருமாள் கோயிலில் இருந்து புறப்பாடு வீதியுலா நடைபெறும்.

Search
Most Popular

Leave a Comment

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek