தமிழ்நாடு கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தொல் எழுத்து பயிற்சி முகாம்!

by puthiyavanadmin on | 2025-02-09 21:38:52

Share: | | |


கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தொல் எழுத்து பயிற்சி முகாம்!

கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தொல் எழுத்து பயிற்சி முகாம் - கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பழங்கால எழுத்துக்களை பற்றி தெரிந்து கொண்டனர். இந்த இரண்டு நாள் பயிற்சி தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தாக மாணவிகள் தெரிவித்தனர்.  

கிருஷ்ணகிரியில் அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட தொல் எழுத்துப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட புத்தக பேரவையும் இணைந்து 2 நாட்கள் ந்டத்திய இந்த பயிற்சி வகுப்பில், மனிதனின் தோற்றம், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள், அதன் பின்னர், தோன்றிய வரி வடிவம், எழுத்து தோன்றியதன் வரலாறு, மலர்ச்சி அடைந்த் எழுத்து வடிவங்கள் மற்றும் இந்தியாவில், பானை ஓடுகளில் குறியிடுகள், கல்வெட்டை படியெடுத்தல் மற்றும் அதன் எழுத்துக்களை வாசித்தல் குறித்துப் பயிற்சியளிக்கப்பட்டது.  

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பயிற்சி பெற்றனர். மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற காப்பாட்சிதர் கோவிந்தராஜ் பயிற்சி அளித்தார்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek