by puthiyavanadmin on | 2025-02-09 16:55:59
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வசித்து வரும் வீடு வைத்து உள்ளவர்களுக்கு கணினி பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கிரைய பத்திரம் வைத்திருந்து வீட்டு உரிமையாளர் பெயரில் கணினி பட்டா பெறாமல் வீடு வைத்திருப்பவர்களுக்கு மற்றும் தமிழ்நாடு அரசால் பட்டா வழங்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யாமல் இருப்பவர்களுக்கு கணினி பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஏற்பாட்டில் தூத்துக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் மீளவிட்டான், சங்கரப்பேரி, முத்தம்மாள் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கிருஷ்ணராஜபுரம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கணினி பட்டா கேட்டு அமைச்சர் கீதா ஜீவனிடம் மனு அளித்தனர். பொதுமக்கள் பட்டா கேட்டு வழங்கிய மனுவை அதிகாரிகள் பரிசீலனை செய்து உடனடியாக கணினி பட்டா வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use
தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா
Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek