by puthiyavanadmin on | 2024-01-15 21:30:31
சென்னை திருப்போரூர் அருகே உள்ள மானாம்பதியில் ஜீவசக்தி ஹவுசிங் மல்டி ஸ்டேட் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிமிடெட் வங்கியை ஆசிய தமிழ்ச் சங்கம் நிறுவனர் விஷாகன் திறந்து வைத்தார்.
மண்ணின் மைந்தர்கள் கழகம் நிறுவனர் தலைவர் சேனாதிபதி டாக்டர் ஆ.சா.செல்வராஜ் சிறப்பு முயற்சியால் மானாம்பதி பஜார் வீதியில் உருவாக்கப்பட்டுள்ள ஜீவசக்தி ஹவுசிங் மல்டி ஸ்டேட் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிமிடெட் வங்கி திறப்பு விழா நடைபெற்றது. இந்தோனேசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், ஆசிய தமிழ்ச் சங்கத்தின் நிறுவனருமான விஷாகன் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் திருக்கழுகுன்றம் கல்விதந்தை லியோ ஸ்டான்லி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் முல்லர், தனம் டிரான்ஸ்போர்ட் நிர்வாகி தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
துணைத் தலைவர் ஜோஸ்பின் செல்வராஜ், ஏ.எஸ், காருண்யா, சேரன்,ரோஜர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மண்ணின் மைந்தர்கள் கழகம் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் வேணுகோபால், போதகரணி மாநிலத் தலைவர் கார்த்திகேயன், ஜெபசிங் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use
தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா
Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek