சினிமா சென்னை

கரகாட்டக்காரி மாங்குயில் கனகாவா இது...?- இணையத்தில் வைரலாகும் நடிகை கனகா

by puthiyavanadmin on | 2023-11-27 21:34:00

Share: | | |


கரகாட்டக்காரி மாங்குயில் கனகாவா இது...?- இணையத்தில் வைரலாகும் நடிகை கனகா

நடிகை குட்டினி பத்மினி தனது எக்ஸ் தளத்தில் நடிகை கனகா உடனான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான இவர், கரகாட்டக்காரனில் நடிகர் ராமராஜனுடன் நடித்த நடிப்பு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. மாங்குயிலே... பூங்குயிலே... பாடல் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் கனகா. துறுதுறு கண்களை உருட்டி காதல் வலையை கண்முன் நிறுத்தியவர்.


தமிழில் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் ரொம்ப காலமாக விலகியிருந்த கனகாவுடன் நடிகை குட்டி பத்மினி வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது. அவரா...இவர் எனக் கேட்கும் அளவுக்கு கனகாவின் போட்டோ அமைந்துள்ளதை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஆர்வத்துடன்பார்த்து வருகின்றனர்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek