தமிழ்நாடு கோவை

கோவை காளப்பட்டி சந்திரா மாரி சர்வதேச பள்ளியில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு போட்டி

by puthiyavanadmin on | 2024-12-02 13:31:32

Share: | | |


கோவை காளப்பட்டி சந்திரா மாரி சர்வதேச பள்ளியில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு போட்டி

தமிழகத்தில் அரசு தனியார் பள்ளிகளில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அந்த ஒரு ஒத்துழைப்புதான் எங்களது தனித்தன்மையை ஊக்கப்படுத்தியதன் மூலமாக ஒலிம்பிக் போட்டிகளில் நாங்கள் பங்கேற்பதற்கு உறுதுணையாக இருந்தது என்பதாக மாணவர்கள் மத்தியில் தங்களது அனுபவங்களை
தேசிய அத்தலடிக் வீராங்கனை.ரேவதி சாப்ட் பால் மற்றும் வீரர்  நந்தகுமார் பகிர்ந்து கொண்டனர்.

கோவை காளப்பட்டி சந்திரா மாரி சர்வதேச பள்ளியில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஒலிம்பிக் போட்டியில் வென்ற தேசிய அத்தலடிக் வீராங்கனை ரேவதி. தேசிய சாப்ட்டு பால் வீரர் நந்தகுமார் பள்ளியின் தலைவர் முரளி குமார் தாளாளர் சுமதி முரளி குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி தொடங்கிய விளையாட்டு போட்டியில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பை பதக்கம் வழங்கி பள்ளியின் தலைவர் முரளி குமார் பாராட்டி கௌரவித்தார்.

விளையாட்டு போட்டி குறித்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தேசிய அத்தலடிக் வீர ரேவதி சாப்ட் பால் வீரர் நந்தகுமார் மற்றும்
பள்ளியின் தாளாளர் சுமதி முரளி குமார் இயக்குனர் டாக்டர் விஜய் சந்துரு  பேசியதாவது- தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது நாங்கள் தென் மாவட்டத்தை சார்ந்தவர்கள் தான் எங்களது தனித்தன்மையை ஊக்கப்படுத்தியதால் ஒலிம்பிக் போட்டிகளில் நாங்கள் பங்கேற்பதற்கு உறுதுணையாக இருந்தது நாங்கள் பெற்ற அனுபவத்தை வருங்கால குழந்தைகளுக்கும் அறியச் செய்ய வேண்டும் பள்ளியில் மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்திட எங்களது அனுபவங்களை பகிர்ந்து உள்ளோம். மாணவ மாணவிகளிடம் கல்வியைத் தாண்டி அவர்களிடம் உள்ள திறமைகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஏற்ற வகையில் மாணவ செல்வங்களை  தயார் படுத்துவதற்காக தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற ஒலிம்பிக் வீரர்களை வரவழைத்து ரோல் மாடலாக மாணவ மாணவிகளை விளையாட்டில் தனித்தன்மை பெற தயார்படுத்தி கொள்ள வேண்டும். குழந்தைகளின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து கிரிக்கெட் அணி வீரர்களாக எட்டு அணிகள் உருவாக்கி உள்ளோம் மாணவர்களும் பெற்றோர்களும் தனித்திறமை வெளிப்படுத்த சந்திர மாரி பள்ளி ஒரு சிறந்த களமாக திகழும் என்பதாக தெரிவித்தனர்.
 

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek