by puthiyavanadmin on | 2024-12-02 12:31:03
திரைப்படங்களை விமர்சனம் செய்வதில் அனைவருக்கும் உரிமை உள்ளதாகவும் அதே நேரத்தில் ஒரு படத்தை பார்க்க வேண்டாம் என விமர்சனம் செய்வது - தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரையரங்குகள், திரைப்பட விநியோகஸ்தர்கள், படக்குழுவினர்கள் என அனைத்து விதமானவர்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளான சூழ்நிலையில் அமைகிறது என இருப்பதாக பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் ரியோ வருத்தம் தெரிவித்துள்ளார்.
கோவை பந்தய சாலை பகுதியில் பாசிபிள் (Possible) எனும் புதிய வீடியோ மற்றும் ஆடியோ தொழில் நுட்பம் தொடர்பான ஸ்டுடியோ துவங்கப்பட்டது. திரைப்படம், சின்னத்திரை போன்றவற்றை தாண்டி தற்போது அதிகரித்து வரும் யூடியூப் போன்ற சமூக வலை தளங்களில் தங்களை பிரபல படுத்த நினைப்பவர்களுக்கும், அதே நேரத்தில் தேர்ந்த நுட்பமான தொழில் நுட்பத்தில் தங்களது வீடியோ மற்றும் ஆடியோக்களை டப்பிங், எடிட்டிங் செய்து முழு வீடியோவாக தயாரித்து வழங்கும் வகையில், போட்காஸ்டிங் வசதி அரங்குகள் அதி நவீன வசதிகள் கொண்ட பாசிபிள் ஸ்டுடியோவை பிரபல நடிகர் ரியோ திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரியோ கூறியதாவது- கோவையில் திரைப்படம் தொடர்பான கலைஞர்கள் அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற ஸ்டுடியோக்கள் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைக்கும் ஸ்வீட் ஹார்ட் எனும் புதிய படத்தில் தாம் நடித்து விரைவில் வெளியாக உள்ளது. காதல் கதையில் புதிய பரிணாமத்தில் இந்த படத்தில் நடித்துள்ளேன் என்றார்.
Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use
தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா
Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek