by puthiyavanadmin on | 2024-11-03 21:52:30
சென்னை திருப்போரூர் அருகே உள்ள மானாம்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய தூய்மை பணி ஆணைய தலைவர் ம. வெங்கடேசன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கி கவுரவித்தார்.
you tube Link....
மண்ணின் மைந்தர்கள் கழகத்தின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.சா. செல்வராஜ் ஏற்பாட்டின் பேரில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி மானாம்பதியில் நடைபெற்றது.
முன்னதாக அவரது இல்லத்திற்கு வருகை தந்த தேசிய தூய்மைப் பணிகள் ஆணையத் தலைவர் ம.வெங்கடேசன் மதிய உணவு அருந்தினார். டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த தேசிய தூய்மை பணி ஆணைய தலைவர் ம.வெங்கடேசன், மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மண்ணின் மைந்தர்கள் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use
தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா
Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek