by puthiyavanadmin on | 2024-08-10 12:57:57
கேரள மாநிலம் வயநாடு, சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் ஜூலை 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி, 400-க்கமேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி உளளிட்டோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட பிரதமர் மோடி வயநாடு சென்றுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் விமானநிலையத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை முதல்வர் பினராய் விஜயன், ஆளுநர் ஆரிப் முகம்மது கான் ஆகியோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கண்ணூரிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வயநாடு சென்றடைந்தார். வயநாட்டில் ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use
தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா
Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek