தமிழ்நாடு தூத்துக்குடி

கிணறு தூர்வாரும் போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு -காப்பாற்ற முயற்சித்த இருவருக்கு மயக்கம்!

by puthiyavanadmin on | 2024-08-04 19:55:53

Share: | | |


கிணறு தூர்வாரும் போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு -காப்பாற்ற முயற்சித்த இருவருக்கு மயக்கம்!

தூத்துக்குடி, தாளமுத்து நகர் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குடி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆனந்த் நகர் பகுதியில் வசித்து வரும் கந்தசாமி நாடார் மகன் கணேசன்(60). தனது வீட்டில் உள்ள கிணற்றில் தூர் வாருவதற்காக வாடகைக்கு தண்ணீர் இறைக்கும் மோட்டார்களை கொண்டு வந்து கிணற்றுக்குள் இறக்கி, கிணற்றில் இருந்த சகதி மற்றும் அகழி தண்ணீரை வெளியேற்றி உள்ளார்.

தூர்வாரும் பணியை முடித்த கணேசன் குடும்பத்தினருடன் கைகளை கழுவி விட்டு சாப்பிட்டுள்ளனர். பின்னர் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவி உள்ளனர். அப்போது கை தவறி பாத்திரம் கிணத்துக்குள் விழுந்துள்ளது. அந்த பாத்திரத்தை எடுப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய கணேசன் விஷவாயு தாக்கி மயக்கம் போட்டுள்ளார். இதனை அறிந்த அவரது வீட்டிற்கு விருந்துக்கு வந்திருந்த மாரிமுத்து அவரை காப்பாற்றுவதற்காக இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். இவரையும் விஷவாயு தாக்கியதால் மயக்கமடைந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இயேசுராஜா, ராஜ் ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கி காப்பாற்ற முயற்சித்துள்ளனர். இவர்களும் கிணற்றுக்குள் இருந்து வெளியே வரவில்லை.

இந்த நிலையில் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் நால்வரையும் மீட்டனர். இருந்தபோதிலும் அடுத்தடுத்து விஷவாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கண்ணன், மாரிமுத்து ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
இயேசுராஜா, ராஜ் ஆகியோர் மயங்கிய நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek